ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
பதிவு : அக்டோபர் 09, 2020, 08:26 AM
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்ததற்கு எதிராக வாக்களித்தல் தொடர்பாக 10 மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு முன்மொழிந்த கடன்பெறும் இரண்டு வழிகளை ஏற்று கொள்ள மறுத்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக அக்கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* மாநிலங்களுக்கு நிதியை வழங்க வேண்டியது, மத்திய அரசின் தார்மீக மற்றும் சட்டரீதியான கடமையாக இருக்கும் போது, அவ்வாறு  வழங்கப்படாத நிதிக்கு பதிலாக கடன் வாங்கி கொள்ளுமாறு மத்திய அரசு முன்மொழிவது, மாநிலங்களுக்கான உரிமையை பரிதாபத்திற்கு உள்ளாக்குவது ஆகும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் மட்டும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக் கணக்கில் இருந்து 47 ஆயிரத்து  272 கோடி ரூபாயை, சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியத் தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டி காட்டியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைத் திரும்ப பெற  இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காக மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் போராட்டம் வீண்போகாது என்றும் அக்கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"வேலைவாய்ப்பு - போர்க்கால நடவடிக்கை எடுங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

58 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

50 views

ஜெ.மரணம்;யாரும் தப்ப முடியாது - ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

45 views

பிற செய்திகள்

பிரெஞ்சு துணை தூதரகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பிரான்சில் உள்ள தேவாலயத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

139 views

ராகுல் காந்தி திடீர் சிம்லா பயணம் -காரணம் என்ன?

அக்டோபர் 28 ம் தேதி முடிவடைந்த முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பீகார் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு எடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிம்லா சென்று உள்ளார். அங்கு அவர் தலைநகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் சப்ராவில் அமைந்துள்ள தனது சகோதரி பிரியங்கா காந்திக்கு, சொந்தமான ஒரு பங்களாவில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

149 views

2020-க்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம் - பட்டியல் வெளியீடு

2020 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு பதக்கம் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

17 views

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபத்தில் சரிவு - ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

115 views

"நடுநிலைமையோடு எப்படி செயல்பட முடியும்?" - பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கேள்வி

கூகுள் நிறுவனத்தின் நடுநிலைமை மற்றும் டேட்டா பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி தனிநபர் பாதுகாப்பு மசோதாவிற்கான நாடாளுமன்ற குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 views

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் நீர்வழி விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.