இலக்கியத்துக்கான நோபல் பரிசு - அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ்-க்கு அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 08, 2020, 07:08 PM
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் Louise Gluck-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் Louise Gluck-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ்-க்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்தது. நியூயார்க்கில் பிறந்த லூயிஸ், First born, வில்லேஜ் லைஃப் உள்ளிட்ட பல நூல்கள், கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் அமெரிக்க அரசின் பல விருதுகளையும், புலிட்சர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.