ஊரடங்கு தடையையும் மீறி செயல்படும் தனியார் பள்ளி - பெற்றோர்கள் புகார்
பதிவு : அக்டோபர் 08, 2020, 04:42 PM
மதுரை பாலரெங்காபுரம் பகுதியில் ஊரடங்கு தடையையும் மீறி தனியார் பள்ளி ஒன்று, செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை பாலரெங்காபுரம் பகுதியில்  ஊரடங்கு தடையையும் மீறி தனியார் பள்ளி ஒன்று, செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலரெங்காபுரம் பகுதியில் இயங்கிவரும் பிரபல தனியார் பள்ளி, கடந்த செப்டம்டர் 21 ஆம் தேதி முதல் எந்தவித கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி வகுப்புகளை நடத்தி வருவதாக மாணவர்கள், பெற்றோர் புகார் அளித்துள்ளனர். காலை முதல் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை உள்ள நிலையில், விதிகளை மீறி செயல்படும் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.