சட்ட விரோதக் காவல் மரணம் என புகார் - உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
பதிவு : அக்டோபர் 08, 2020, 04:37 PM
சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை பேரையூரை சேர்ந்த இளைஞர் ரமேஷ், காவல் மரணத்தில் உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. சட்டவிரோதக் காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடய அறிவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களை கொண்டு உடற்கூராய்வு செய்தது ஏன் ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 20 முதல் 40 நிமிடங்கள் பயண நேரம் கொண்ட தேனி மருத்துவக்கல்லூரி அல்லது மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு உடலைக் கொண்டு செல்லாமல் உசிலம்பட்டி மருத்துவமனையிலேயே உடற்கூறு ஆய்வை அவசர அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், ரமேஷின் உடலை நெல்லை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.