மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம்
பதிவு : அக்டோபர் 08, 2020, 04:33 PM
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அரசு உதவி வழங்க கோரி சென்னையை சேர்ந்த வின்கெம் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உள்நாட்டு ஆராய்ச்சியையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர். மேலும், மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு ஒரு நாட்டை மட்டுமே நம்பியிருப்பது தேச பாதுகாப்புக்கு ஆபத்தானது என்றும் நீதிபதி கிருபாகரன் சுட்டிக்காட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.