'கியூ ஆர் கோடு' மூலமாக நடக்கும் மோசடி - "ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும்போது கவனம்"
பதிவு : அக்டோபர் 08, 2020, 10:37 AM
குறைந்த விலையில் விற்பனை என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து கியூ ஆர் கோடு மூலம் மோசடி செய்யப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பல மோசடி சம்பவம் அதிகரித்து வருகிறது.  கியூ ஆர் கோடு மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து செயல்படும் திருட்டு கும்பல்,
ஆன்-லைனில் விலை அதிகமான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்கின்றன. அதனை நம்பி பொருளை வாங்க முன் வருபவர்களிடம், பணத்தை தாங்கள் அனுப்பும் QR கோடில் செலுத்த சொல்கின்றனர். ஆனால், பணத்தை பெற்றவுடன் பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக வாகன விற்பனையின் போது மோசடி கும்பல், வாடிக்கையாளர்களை நம்ப செய்ய ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரடங்கு காலத்தில் இது போன்று வடமாநில கும்பல்களால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

"பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

536 views

கொரோனா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடக்கம் - அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தகவல்

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கி உள்ளதாக அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

138 views

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா?

(17/08/2020) ஆயுத எழுத்து - இ - பாஸ் தளர்வு, டாஸ்மாக் திறப்பு : அவசியமா? அவசரமா? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி, அதிமுக // மனுஷ்யபுத்ரன், திமுக // கஸ்தூரி, நடிகை // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர்

108 views

வெள்ளை மாளிகை பால்கனியில் இருந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த டிரம்ப்

தான் விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

50 views

பிற செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

15 views

மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

10 views

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

8 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

19 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.