"சபரிமலை ஐப்பசி மாத பூஜைக்கு தினமும் 250 பேர் மட்டும் அனுமதி" - பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு
பதிவு : அக்டோபர் 08, 2020, 10:27 AM
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன்  கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி  மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஐப்பசி மாத பூஜைக்கு ஒரு நாளைக்கு 250 பேர் மட்டும் அனுமதி என, முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் நிலக்கல்லில் பக்தர்களுக்கு ஆண்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும்  எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற வழிபாட்டுத் தலங்களிலும் ஒரே நேரத்தில்  20 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு விழாக்களின் போது அந்தந்த வழிபாட்டு தலங்களின் வசதிகளை பொறுத்து 40 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

885 views

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

59 views

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

120 views

"மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

50 views

நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு - 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க முடிவு

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் குறித்து முடிவெடுக்க பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.