பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக கண்டன குரல் எழுப்புவோம் - ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 07, 2020, 06:59 PM
தமிழ்மொழி மீது பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் மத்திய அரசின் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து கண்டன குரல் எழுப்புவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி மீது பண்பாட்டு படையெடுப்பை நடத்தும் மத்திய அரசின் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைந்து கண்டன குரல் எழுப்புவோம் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் இந்தி திணிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர் நலன் புறக்கணிப்புக்கு துணை போகும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். 
இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவரைப் புறக்கணித்தது, கடும் கண்டனத்திற்குள்ளானது என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழி, செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது  வஞ்சகச் செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.