முகக் கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைப்பு
பதிவு : அக்டோபர் 07, 2020, 06:54 PM
கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயிரம் ருபாய் அபராத தொகை 250 ரூபாயாக மாநில அரசு குறைத்துள்ளது.
கர்நாடகாவில் சராசரியாக தினசரி 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொற்றை  கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு நகர்ப்புறங்களில் ரூபாய் ஆயிரம் அபராதமும், கிராமப்புறங்களில் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இந்த அபராத தொகைக்கு வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதற்கு மக்கள்  கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் நகரப் புறங்களில் 250 ரூபாயாகவும்,  கிராமப்புறங்களில் 100 ரூபாயாகவும் அபராத தொகையை அரசு குறைத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.