முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பதிவு : அக்டோபர் 07, 2020, 04:17 PM
தேனி சுற்று வட்டார பகுதிகளின் விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி சுற்று வட்டார பகுதிகளின் விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி சுற்றுவட்டார பகுதிகளில் முதல் போக விவசாய பாசனத்திற்காக முல்லை பெரியார் அணையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்து வைத்தார். மதகுகளில் இருந்து வெளிவந்த தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து தேனி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்து 614 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.