பாஜக பிரமுகர் என கூறி நிதி மோசடி - முன் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற்றம்
பதிவு : அக்டோபர் 07, 2020, 04:13 PM
மதுரையில் பாரத பிரதமரின் கடன் உதவித் திட்டத்தில் நிதி வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாரத மாத என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முகி பாலமுருகன் என்பவர்  தான் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக கூறிவந்துள்ளார்,. மேலும், பிரதம மந்திரியின் பெயரில் மத்திய அரசு வழங்கும் கடன் உதவித்திட்டத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல்  கடன் உதவி பெற்றுத்தருவதாக ஏராளமானோரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு பலகோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது,. இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட முகி  பாலமுருகன்  மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர்  மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.  பாரத பிரதமரின் திட்டம் என்பதால் நம்பிக்கையுடன் பணம் செலுத்தியதாகவும்,  பிரதமரின் பெயரை கூறி மோசடி செய்த முகி  பாலமுருகனை கைது செய்வதுடன் மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.