அரசு கல்லூரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்
பதிவு : அக்டோபர் 07, 2020, 04:07 PM
அரசு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தொகுப்பூதியத்தில் 2 ஆயிரத்து 423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் தொகுப்பூதியத்தில் 2 ஆயிரத்து 423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2019- 20 ஆம் கல்வியாண்டு தொடக்கத்திலேயே 3 ஆயிரத்து 443 காலிப்பணியிடங்கள் இருந்தன எனவும்,  மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உதவிப் பேராசிரியர் நியமனம் செய்யப்படும் வரை மாதம் பதினைந்தாயிரம் தொகுப்பூதியத்தில் 2020-21 ம் ஆண்டில்  2 ஆயிரத்து 423 கூடுதல் கௌரவ  விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.