கிசான் திட்டத்தில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
பதிவு : அக்டோபர் 07, 2020, 02:30 PM
தமிழகத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திண்டுக்கலை சேர்ந்த சிவபெருமாள் என்பவர், பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முறைகேட்டில் எத்தனை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது, எத்தனை அதிகாரிகளை கைது செய்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினர்.   விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக விவசாயிகளை சென்றடைந்து உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளின் விவசாயத் துறை செயலர்கள், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.