60 நாட்களாகியும் கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள் - விவசாயிகள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 07, 2020, 02:25 PM
மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து, விவசாயிகள் மழையில் நனைந்தபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே வழுவூரில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கடந்த 5 ஆம் தேதி திறக்கப்பட்டன. ஆனால் ஒரு நாள் மட்டும் கொள்முதல் செய்துவிட்டு, மீண்டும் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 60 நாட்களுக்கும் மேலாக பத்தாயிரம் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொள்முதல் நிலையத்தில் வைத்து பாதுகாத்து வந்ததாகவும், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக முட்டைகள் நனைந்து முளைத்து விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை - திருவாரூர் செல்லும் சாலையில் வழுவூர் கடைவீதியில் மழையில் நனைந்து சேதமான நெல்மூட்டைகளை சாலையில் போட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார், உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.