ஹத்ராஸ் வழக்கில் வெளியான அடுத்த அதிர்ச்சி - பெண்ணின் சகோதரரிடம் விசாரணை
பதிவு : அக்டோபர் 07, 2020, 02:08 PM
ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினருடன் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் இருந்ததற்கான செல்போன் ஆதாரம் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதான இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் கைதான குற்றவாளிகளில் ஒருவர் பெண்ணின் சகோதரருடன் அடிக்கடி  செல்போனில் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளின் செல்போன் அழைப்புகளை விசாரித்த போது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. 3 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் இந்த இரு தரப்பிலும் இருந்ததும் உறுதியாகி உள்ளது. இதையடுத்து பெண்ணின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங்., இப்போது ஹத்ராஸ் சம்பவ குற்றவாளிகளுக்காக ஆஜராகி வாதாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.