67 லட்சத்தை தாண்டிய கொரோனா தொற்று பாதிப்பு
பதிவு : அக்டோபர் 07, 2020, 01:10 PM
நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 72 ஆயிரத்து 49 பேருக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 986 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 67 லட்சத்து 57 ஆயிரத்து 132 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், நாட்டின் பல்பேறு மருத்துவமனைகளில் 9 லட்சத்து 7 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 57 லட்சத்து 44 ஆயிரத்து 694 பேர் குணமடைந்த வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றிஇதுவரை ஒரு லட்சத்து நான்காயிரத்து 555 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 11 லட்சத்து 99 ஆயிரத்து 857 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 8 கோடியே 22 லட்சத்து 71 ஆயிரத்து 654 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து மீளுவோர் சதவீதம் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 82 ஆயிரத்து 203 பேர் குணமடைந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.