பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங். எம்.பி.ஜோதிமணி
பதிவு : அக்டோபர் 06, 2020, 03:44 PM
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு சத்தியாகிரகப் போராட்டம் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில்  இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட  அநீதியை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தலைமையில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு சத்தியாகிரகப் போராட்டம்  கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பா.ஜ.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்,  பெண்கள் பெண்கள் மீது இரக்கம் இல்லாத அரசாக யோகி ஆதித்யநாத் அரசு உள்ளதாக குற்றம்சாட்டினார்.  பிஜேபி அரசு உள்ளது.  பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் ஆணாதிக்க சூழல் நிலவுகிறது என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சி நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் பாதுகாப்பாக துணை நிற்கும் என்று கூறிய ராகுல் காந்தியின் கருத்து,  பெண்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.