தசரா விழா நடத்தக்கோரி உண்ணாவிரதம் - அனுமதி மீறி நடந்த போராட்டம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:57 PM
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், தசரா விழாவை நடத்தக் கோரி, பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், தசரா விழாவை நடத்தக் கோரி,  பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 17 ஆம் தேதி குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தசரா திருவிழாவிற்கு பக்தர்களை காப்பு கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் , சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் நேர்த்தி கடன்களை செலுத்த அனுமதி வழங்கக் கோரியும், இந்த போராட்டம் நடைபெற்றது. அனுமதியை மீறி இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற சுமார் 100 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.