ஹாத்ராஸ் சம்பவம் : பிரதமர் வாய்திறக்காதது ஏன்? - ராகுல்காந்தி
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:41 PM
ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா-வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவுப் பாதுகாப்பின் கட்டமைப்பை அழிக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார். மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு எதிராக கறுப்புச் சட்டங்களை இயற்றியிருப்பதாக விமர்சித்த ராகுல்காந்தி, விவசாயிகளை மிகவும் பாதிக்கும் இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், கொரோனா ஊரடங்கின் மூலம் நாட்டின் பொருளாதார முதுகெலும்பான சிறுகுறு நிறுவனங்களை பிரதமர் மோடி அழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.