"எம்.டி., எம்.எஸ். படிக்கும் மருத்துவர்களுக்கு கட்டாய அரசு பணி உத்தரவு செல்லும்"
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:30 PM
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிக்கும் மருத்துவர்களுக்கு கட்டாய அரசு பணி உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வு, 2 ஆண்டுகள் பணி முடித்த பிறகே, சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் ஒப்பந்தம் சரிதான் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதேசமயம், இரண்டு ஆண்டுகளுக்குள் பணி வழங்க முடியாவிட்டால், மாணவர்களுக்கு சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.