கொரோனா வைரஸ் பாதித்தவர் வீடுகளில் தகரம் அமைத்தது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
பதிவு : அக்டோபர் 06, 2020, 02:20 PM
மாற்றம் : அக்டோபர் 06, 2020, 02:24 PM
கொரோனா தொற்று பாதித்தவர் வீடுகளை தகரம் வைத்து அடைப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார்.தொற்று பாதித்த தனது கணவரை சிகிச்சை மையத்தில் அழைத்து சென்ற பிறகு, வீடு தகரம் வைத்து அடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா  அமர்வு, கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில்  தகரம் அடிக்கபடுவதற்கான காரணம் என்ன? கேள்வி எழுப்பினர். எந்த விதியின் அடிப்படையில் தரகம் அடிக்கபடுகிறது எனக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், தனக்கு தொற்று ஏற்பட்ட போது, மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை என நீதிபதி சத்தியநாராயணன் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.