ஹாத்ரஸ் விவகாரத்தில் உ.பி.அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:54 PM
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு தலித் பெண் பலியான விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட கோரிய பொது நலன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில், உத்தரபிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வன்முறை சம்பவங்களை  தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில், உத்தரப்பிர​தேச அரசு தாக்கல் செய்துள்ள  பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.  சாதி மற்றும் மத சக்திகள் இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என உளவுத்துறை தகவல் எச்சரித்ததும் அதில் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில், நியாயமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச  அரசுக்கு எதிராக அவப்பெயரை சில அரசியல் கட்சிகளும் , ஊடகங்களும் உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு சில அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் சாதி சாயம் பூசி வருகின்றன என்றும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

7 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

18 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - ராகுல்காந்தி விளக்கம்

உத்தரபிரதேச சம்பவத்தை போன்று பஞ்சாப் அல்லது ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என்று அம்மாநில அரசுகள் மறுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

131 views

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள் - ஆந்திர முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு கடிதம்

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு, பாராட்டு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

240 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.