டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.10.15 கோடி - ரிலையன்ஸ்க்கு அடுத்த இடத்தை பிடித்த டி.சி.எஸ்
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:52 PM
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம், திங்களன்று முதல் முறையாக 10 லட்சம் கோடி மதிப்பை தாண்டியுள்ளது. இதனால் அந்த நிறுவன பங்கு மதிப்பு 2,727 ஆக உயர்ந்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் இரண்டாவது காலாண்டு காலக் கட்டத்திலான வருவாய் தொடர்பான அறிக்கையை நாளை  அளிக்க உள்ள நிலையில், பங்குகளை  திரும்ப வாங்குவதற்கான திட்டத்தை பரிசீலிக்க உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்ததை அடுத்து, டி.சி.எஸ். பங்குகள் மதிப்பு நேற்று  8 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. இதனால், 10.15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், டி.சி.எஸ் தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்  சந்தை மூலதனம் 14.95 லட்சம் கோடியாகும். நேற்றைய வர்த்தக அமர்வில் டி.சி.எஸ்.முதலீட்டாளர்களின் செல்வ மதிப்பு 69,000 கோடி உயர்ந்துள்ளது. நாளை நடைபெறும் இயக்குநர்கள் கூட்டத்தில், பங்குகளை திரும்ப் பெறும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில்,   2 ஆண்டுகளில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் இரண்டாவது பங்கு திரும்பப் பெறும் நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018-ல், டி.சி.எஸ். வாரியம் அதன் பங்கு மூலதனத்தில்1.99 சதவீதத்தை, அதாவது 16,000 கோடி ரூபாய்க்கு மிகாமல் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. டி.சி.எஸ் பங்குகள் நேற்று 7.3 சதவீதம் உயர்ந்து 2,707 டாலராக முடிவடைந்த நிலையில்,  இது நிஃப்டி 50 குறியீட்டை 0.76 சதவீதம் உயர்த்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

78 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

54 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

18 views

மாத்திரைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேவி சிலை - அசாம் கலைஞரின் அசத்தல் படைப்பு

அசாமில் காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி துர்கா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

11 views

ஜண்டேவாலான் கோயிலில் நவராத்திரி விழா - 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை

நவராத்திரியை யொட்டி, டெல்லியில் உள்ள ஜண்டேவாலான் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று, ஆதிசக்திக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

8 views

தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!

வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

26 views

ஜூன்-2021-ல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி - பாரத் பயோடெக் நிறுவனம் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை வெளியிட பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

19 views

"அண்டை நாடுகளுடன் நல்ல உறவையே இந்தியா விரும்புகிறது" - ராஜ்நாத் சிங் தகவல்

மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் டார்ஜிலிங்கின் சுக்னாவில் உள்ள 33-வது படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.