"கடன் தள்ளிவைப்பு காலத்துக்கான கூட்டு வட்டி போடுவதைக் கைவிட வேண்டும்" - நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:39 PM
கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்து​ள்ளார்.
கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான  தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடுவதைக் கைவிட வேண்டுமென்று  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்து​ள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் வட்டிக்கு வட்டி போடுவது கொரோனா பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சுட்டிக்காட்டி உள்ளார்.  தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இக் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன் வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.  எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத் தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு மையம் விவகாரம்: "தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லாதது அதிர்ச்சி" - சு.வெங்கடேசன்

மத்திய ரிசர்வ் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளநிலையில், தமிழகத்தில் ஒரு தேர்வு மையம் கூட இல்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குற்றஞ்சாட்டியுள்ளார்.

24 views

பிற செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் பா.ஜ.க.வில் சேர்கிறார்

நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்

146 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

28 views

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - ராகுல்காந்தி விளக்கம்

உத்தரபிரதேச சம்பவத்தை போன்று பஞ்சாப் அல்லது ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என்று அம்மாநில அரசுகள் மறுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

131 views

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள் - ஆந்திர முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு கடிதம்

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு, பாராட்டு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

240 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.