நாளை அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை
பதிவு : அக்டோபர் 06, 2020, 01:19 PM
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்பட நிலையில், முதல்வர், துணை முதல்வர் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். இவர்களை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தனர். அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பது, அந்த குழுவிற்கு எத்தகைய அதிகாரம் வழங்குவது என்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெறும் முக்கிய நிர்வாகிகளின் சந்திப்பு, அதிரடி ஆலோசனை கூட்டங்கள், அமைச்சர்களின் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் அ.தி.மு.கவினரின் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க. "49" - எம்.ஜி.ஆர் முதல் ஈ.பி.எஸ் வரை

தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. இன்று 49 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒரு தொண்டன் தொடங்கிய அந்தக் கட்சியில் எம்.ஜி.ஆர். தன்னை ஒரு தொண்டராகவே இணைத்துக் கொண்டார். இன்றும் அந்த இயக்கம் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். என்ற இரு தொண்டர்களால் வழிநடத்தப்படுகிறது.

152 views

பிற செய்திகள்

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

33 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

882 views

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

59 views

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஏ.சி.சண்முகம் சந்திப்பு

அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என கூறப்படும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

120 views

"மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

50 views

நவம்பர் 22-ஆம் தேதி பா.ம.க, வன்னியர் சங்க கூட்டுப் பொதுக்குழு - 20% தனி இட ஒதுக்கீட்டு போராட்டம் பற்றி விவாதிக்க முடிவு

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் குறித்து முடிவெடுக்க பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.