தனியார் காப்பீட்டு நிறுவனம் நடத்தி வரும் பெண்ணுக்கு மிரட்டல் - அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை
பதிவு : அக்டோபர் 06, 2020, 12:51 PM
சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனம் நடத்தி வரும் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தன் கணவருடன் சேர்ந்து நடத்தி வந்தார் 32 வயது பெண். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன் நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ரத்தினகுமார் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார் அந்த பெண்... 

அலுவலக ரீதியான இவர்களின் பேச்சு, ஒரு கட்டத்தில் அந்தரங்கம் வரை நீளும் அளவுக்கு நட்பும் தொடர்ந்துள்ளது. தன் நண்பர் என்ற அடிப்படையில் தன் முன்னாள் காதல் பற்றி பேசியிருக்கிறார் அவர். 

திருமணத்திற்கு முன்பாக வினய் கல்யாண் என்பவரை காதலித்து வந்ததாக அந்த பெண் ரத்தினகுமாரிடம் கூறியிருக்கிறார். அதுவரை நட்பாக பழகி வந்த ரத்தினகுமார், தன் சுயரூபத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். 

முன்னாள் காதலனை பற்றி அந்த பெண் கூறியதை ஆதாரமாக வைத்துக் கொண்டு தன் முதலாளியையே மிரட்ட ஆரம்பித்துள்ளார். முன்னாள் காதலன் பற்றி கணவரிடம் கூறிவிடுவேன் என கூறி மிரட்டல் ஆரம்பித்துள்ளது. ​

பின்னர் அந்த பெண்ணின் நிர்வாண படங்களையும், வீடியோக்களையும் அவருக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி தனக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என கருதிய அவரும், ரத்தினகுமாரின் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து போகவே, அந்த சம்பவங்களை எல்லாம் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு மேலும் மேலும் அத்துமீறியிருக்கிறார். 

மேலும் பெண்ணின் முன்னாள் காதலனான வினய் கல்யாணையும் கூட்டு சேர்த்துக் கொண்ட ரத்தினகுமார், தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வரவே, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண், தன் கணவரிடம் நடந்ததை கூறி கதறியிருக்கிறார். 

அதன்பிறகே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெண் அளித்த புகார் அனைத்தும் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் ரத்தினகுமார் மீது 5 பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரின் இமெயிலை போலீசார் கைப்பற்றி சோதனை செய்ததில் ஏராளமான பெண்களின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் இருப்பதும் தெரியவந்தது. 

அதே காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்த 3 பெண்களுக்கும் ரத்தினகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமறைவான ரத்தினகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். வேலை கொடுத்த முதலாளியிடமே ஒரு ஊழியர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பெண்கள் யாரிடம் எந்த அளவு வரைமுறையோடு பழக வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.... 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

10 views

பிற செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் - ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

9 views

சட்ட விரோதமாக மதுவிற்பனை - 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

மலை கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு, பேத்துப்பாறை ,கேசி.பட்டி , பாச்சலூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

107 views

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

204 views

"அமைச்சர் துரைகண்ணு மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியீடு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைகண்ணு, மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

50 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நஷ்டம் - 28 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.