திமுக எம்.பி.கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பதிவு : அக்டோபர் 06, 2020, 10:41 AM
திமுக எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாத்ராஸ் சம்பவத்தை கண்டித்து, சென்னையில் நேற்று திமுக மகளிரணி சார்பில் பேரணி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், கனிமொழி எம்.பி உட்பட 191 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 5 பிரிவின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.