ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறதா "மூக்குத்தி அம்மன்"?
பதிவு : அக்டோபர் 06, 2020, 10:14 AM
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை, ஓ.டி.டி தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை, ஓ.டி.டி தளத்தில் தீபாவளி கொண்டாட்டமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் கூறும்போது, மூக்குத்தி அம்மன் படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதா அல்லது தியேட்டரில் ரிலீஸ் செய்வதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மூக்குத்தி அம்மன் திரைப்படம், கன்னியாகுமரி பகவதி அம்மன் மகிமையை பேசும் பக்தி படமாக தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.