10% போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் - உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தகவல்
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:48 AM
உலக மக்கள்தொகையில் 10% போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பிரிவு தலைவா் மைக்கேல் ரையன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக பேசிய ரையன், தென் கிழக்கு ஆசியாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகளிலும், கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளிலும் தொற்றினால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என்றும் கூறியிருக்கிறார். உலகில் கிராமப்புறம் முதல் நகா்ப்புறம் வரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. உலகின் பெரும் பகுதி அபாயத்தில் இருப்பதே இதனுடைய அர்த்தமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் கடினமான காலத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று கூறிய ரையன், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உயிா்களை காக்கவும் வழிகள் உள்ளன என்றும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். மேலும், தொற்று பரவல் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் குழு விபரங்களை சீனாவிடம் வழங்கியிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.