2020 -மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:41 AM
2020 ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசினை, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதன் காரணங்களை தற்போது பார்ப்போம்
ஹெப்படைட்டிஸ் சி வைரஸை கண்டுபிடித்ததற்காக ஹார்வே ஜே. ஆல்ட்டர், மைக்கேல் ஹாக்டன், சார்லஸ் ரைஸ் உள்ளிட்ட 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோயை ஏற்படுத்தும் காரணிகளை  எதிர்த்துப் போராட  மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைட்டிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சியை, ஏற்படுத்துவதற்கு ஹெப்படைட்டிஸ் சி வைரஸே காரணம் என்பதற்கு மிக உறுதியான ஆதாரத்தை விஞ்ஞானி சார்லஸ் ரைஸ் முன் வைத்தார்.

மைக்கேல் ஹாக்டன் என்கிற விஞ்ஞானி சி வைரஸின் மரபணுவை  தனிமை படுத்துவதற்கான யுக்தியை கண்டறிந்தார். தீவிரமான கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான காரணங்களை இந்த மூவரும் கண்டறிந்ததால், இதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனை மற்றும் புதிய மருந்துகள் ஆகியவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.