தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு? - இறுதி பட்டியலை வெளியிட இடைக்கால தடை
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:33 AM
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதன் இறுதி பட்டியலை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் காலியாகவுள்ள எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு மார்ச்சில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்காக ஜனவரி12 மற்றும் 13ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், கடலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மையங்களில் படித்து தேர்வெழுதிய பலர் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே, தேர்வில் முறைகேடு நடந்த‌தாக புகார் எழுந்த‌தால், ஜனவரி 2 மற்றும் 13ஆம் தேதிகளில் நடந்த எழுத்துத் தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கூறி,  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே, பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இறுதிப்பட்டியலை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.