2-ஜி மேல்முறையீட்டு வழக்கில் காரசார விவாதம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:27 AM
2ஜி மேல்முறையீட்டு வழக்கின் முதல் நாள் விசாரணையின் போது, இரு தரப்பிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
2-ஜி மேல்முறையீடு மனுக்கள் மீதான  தொடர் விசாரணை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் தொடங்கியது. விசாரணையின் போது, சட்டப்படியே மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதாக, சிபிஐ தரப்பு தெரிவித்தது. வழக்கில் எதிர்மனுதாரர்களான ஆசிஃப் பால்வா, சாகித் பால்வா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், இதுதொடர்பாக மத்திய அரசு, சிபிஐக்கு அளித்த அனுமதி கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும், சிபிஐ கையேட்டை சிபிஐ-யே கடைப்பிடிப்பதில்லை என்றும் வாதிட்டார்.இதற்கு சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இது நிர்வாக ரீதியான ஆவணம் என்பதால், எதிர்மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார். நீதிமன்றம் விரும்பினால், மத்திய அரசின் அனுமதி ஆவணத்தை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய தயார் என்றும் வாதிட்டார். இதனை தொடர்ந்து, 2 ஜி வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.