கள்ளக்குறிச்சி எம்எல்ஏ திருமணத்தை சுற்றிய வதந்தி - எம்.எல்.ஏ விளக்கம்
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:14 AM
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் காதல் மனைவியுடன் வீடியோ மூலம் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் காதல் மனைவியுடன் வீடியோ மூலம் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தன் காதலி சவுந்தர்யாவின் சம்மத‌த்துடன் தான் அவரை மணந்த‌தாகவும், பெண் வீட்டாரை மிரட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திருமண விவகாரம் - பெண்ணின் தந்தை மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில், மணப்பெண்ணின் தந்தை மீது, தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தமது மகளை, எம்.எல்.ஏ. பிரபு, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதனால், பிரபு எம்எல்ஏவின் மாமனார் சாமிநாதன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வடதோரசலூர் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி, தியாகதுருகம் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு எண் 1445 பிரிவு 309 தற்கொலை முயற்சி என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு திருமணம் - ஆட்கொணர்வு மனுத் தாக்கல் 

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு சவுந்தர்யா என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில், அப்பெண்ணின் தந்தை சுவாமிநாதன் , தனது மகளை எம்எல்ஏ பிரபு கடத்தி சென்று விட்டதாகவும், அப்பெண்ணை மீட்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  எம்எல்ஏ பிரபு ஆசை  வார்த்தைகள் கூறி தனது மகளை கடத்தி சென்று விட்டதாக சுவாமிநாதன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த 
மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.