புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி - 137 ரன்களில் சுருண்டது பெங்களூரு
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:59 AM
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 19 வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன் படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் ஸ்டோய்னிஸ் அரைசதம் கடந்தார். இதேபோல,  பிரித்விஷா, ரிஷப் பண்ட், தவான் ஆகியோரின் பங்களிப்புடன் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்த‌து. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி, ரபாடாவின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த‌து. ஓரளவுக்கு தாக்குப்பிடித்த கேப்டன் கோலி மட்டும் 43 ரன்கள் எடுத்தார். அன்ரிச் நோர்ட்ஜி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களுக்கு சுருண்டதால், 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.