கொரோனா சிகிச்சை பெற்றுவந்த அதிபர் டிரம்ப் டிஸ்சார்ஜ்
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:48 AM
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வீடு திரும்பினார்.
வால்டர் ரீட்  ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டிரம்ப், இன்று அதிகாலை ஹெலிகாப்டரில் வெள்ளை மாளிகை புறப்பட்டார். தற்போது மிகவும் நலமாக உணர்வதாக டுவிட்டரில் தெரிவித்திருந்த டிரம்ப், கொரோனாவை கொண்டு அச்சம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ குழு, டிரம்ப் முழு ஆபத்தையும் கடந்துவிடவில்லை என எச்சரித்துள்ளனர். டிரம்ப், வீட்டிலிருந்து சிகிச்சையை தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெய்லீ மெக்னனிக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.