கேரள தங்க கடத்தல் விவகாரம் - சுவப்னா சுரேஷுக்கு ஜாமீன் அளிப்பு
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:42 AM
கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய தொடர்புடைய சுவப்னா சுரேஷுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டாலும், சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறையின் வழக்கில் தொடர்புடைய  17 நபர்களில் 10 பேருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய தொடர்புடைய  சுவப்னா சுரேஷ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது  ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் என். ஐ. ஏ. மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்படாததால் சுவப்னா சுரேஷுக்கு சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையை  தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என் ஐ ஏ பதிவு செய்த வழக்கில் கேஸ் டைரி மற்றும் ஆதாரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று என். ஐ. ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.