பா.ஜ.க-வை வரும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:37 AM
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில், மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.
ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில், மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் அமைதி  பேரணி நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மகளிர் காங்கிரசார் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அண்ணா சாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்றனர். மத்திய பாஜக அரசை கண்டித்தும் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பேரணியின்போது பேசிய புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி, பா.ஜ.க-வையும் அதன் கூட்டணி கட்சியையும் வரும் தேர்தலில் ஓட, ஓட விரட்ட வேண்டும், அப்படி செய்தால் தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும் என்றார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.