தட்டார்மடம் கொலை வழக்கு - 4 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை
பதிவு : அக்டோபர் 05, 2020, 06:32 PM
தட்டார்மடம் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 4 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த வியாபாரி செல்வன் கடந்த மாதம் 18 ஆம்  தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தட்டார்மடம் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வரும் காவலர்கள் 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விாசரணை நடத்தி வருகின்றனர். கொலையான செல்வன் காரில் கடத்தப்படும் போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மீது உள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மையை உறுதி செய்யும் வகையில் அவரின் செல்போன் பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு 4 காவலர்களையும் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று விாசரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.