சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளறுபடி - புதிய குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை
பதிவு : அக்டோபர் 05, 2020, 06:26 PM
சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், புதிதாக வேறு ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என சுஷாந்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் சுதீர் குப்தாவின் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சுஷாந்தின் மரணம் என்பது கொலையே என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து விசாரிக்க புதிதாக ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக சுஷாந்தின் வழக்கறிஞரான விகாஷ் சிங்  தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.