கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை
பதிவு : அக்டோபர் 05, 2020, 06:23 PM
மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்திற்குட்பட்ட புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் சனூப். 26 வயதான இவர் அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர் தனது நண்பர்களான ஜிதின், பிபின், ஜித்து ஆகிய 3 பேருடன் தன் நண்பர் ஒருவரை வழியனுப்பிவிட்டு வந்துள்ளனர். அப்போது திடீரென இவர்களை வழிமறித்த ஒரு கும்பல் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் 4 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் சனூப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் தலைமறைவான நிலையில் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக திருவனந்தபுரம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் ஒரு கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.