"நேருக்கு நேரான போர் - எதிர்கொள்ள தயார்"
பதிவு : அக்டோபர் 05, 2020, 04:53 PM
நேருக்கு நேரான போர் உட்பட எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி பதூரியா தெரிவித்துள்ளார்.
நேருக்கு நேரான போர் உட்பட எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி பதூரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். கிழக்கு லடாக் பகுதி மட்டுமின்றி ஒட்டுமொத்த எல்லைப் பகுதி முழுவதுமே தேவையான அளவிற்கு படைகளை நிறுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், ரஃபேல், சினூக்ஸ், அப்பாச்சி ஆகிய போர் விமானங்களை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளில், ரஃபேல் மற்றும் எல்.சி.ஏ மார்க் 1 படைப்பிரிவுகள் முழு பலத்துடன் செயல்படும் என்றும், பதூரியா கூறினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.