இளைஞர் கொலை சம்பவம் : ஹிந்தியில் பேசியதால் கொன்றோம் என கூறி 4 பேர் சரண்
பதிவு : அக்டோபர் 05, 2020, 04:28 PM
நெல்லை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என உயிரிழந்த இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர், கடந்த வாரம் நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மது அருந்திக் கொண்டிருந்த போது சதீஷ்குமார் ஹிந்தியில் பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறி 4 பேர் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தன் மகன் நாங்குநேரியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாலேயே கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மகனின் மரணத்திற்கு உரிய முறையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.