2-ஜி மேல்முறையீடு மனு மீதான தொடர் விசாரணை இன்று தொடங்கியது
பதிவு : அக்டோபர் 05, 2020, 04:19 PM
2-ஜி மேல்முறையீடு மனுக்கள் மீதான தொடர் விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் தொடங்கியது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. - மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த  வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய  அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017 டிசம்பரில் தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறி விட்டது என்று அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018, மார்ச் மாதம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஏற்று, 2ஜி வழக்கு விசாரணை இன்று முதல் தினமும் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி அறிவித்தார்.இதன்படி இன்று விசாரணை தொடங்கியது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.