"விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது"
பதிவு : அக்டோபர் 05, 2020, 04:15 PM
விஜய் மல்லையாவை திரும்ப அனுப்பு இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தங்களுக்கு தெரியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவை திரும்ப அனுப்பு இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தங்களுக்கு தெரியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு இங்கிலாந்துக்கு சென்ற விஜய் மல்லையா, அங்கு தலைமறைவாக இருக்கிறார். இதற்கிடையே,  இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர தூதரகம் மற்றும் சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இங்கிலாந்து தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ரகசியமாக உள்ளதால் தங்களுக்கு தெரியாது எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.