பல்லவன் ரயிலில் 50 கிராம் பொங்கல் விலை ரூ. 80 - உணவுகள் தரமற்றதாக உள்ளதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு
பதிவு : அக்டோபர் 04, 2020, 12:58 PM
பல்லவன் விரைவு ரயி​லில் ஒரு பொங்கல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்குடியில் இருந்து சென்னைக்கு, தினமும் காலை திருச்சி வழியாக பல்லவன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்பந்ததாரர்கள் மூலம், உணவுப் பொருட்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரயில் பயணிகளுக்கு, 'தரமான உணவு, மலிவான விலை' என்பது தான் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அடிப்படை நோக்கம். இந்த நிலையில், கொரோனா காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், உணவுப் பொருட்களின் தரம் என்பது பெயரளவுக்கு கூட இல்லை என்று பயணிகள் குறை கூறியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போதுவேகமாக பரவி வருகிறது. பல்லவன் ரயிலில் செல்லும் பயணி ஒருவர், 50 கிராம் எடையில், இரண்டு கரண்டி அளவே இருக்கும் பொங்கலை, 80 ரூபாய்க்கு விற்பதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், பொங்கலின் காலாவதி தேதி என்று, 8 மாதங்கள் குறிப்பிட்டு உள்ளதையும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில் பயணிகளின் உணவு விவகாரத்தில் தென்னக ரயில்வே தீவிர அக்கறை காட்ட வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது

பிற செய்திகள்

4 மாதங்களுக்கு பின் 3000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

நான்கு மாதங்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

38 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

ஆயுத பூஜை பண்டிகை - வாழை இலை விலை உயர்வு

ஆயுத பூஜைப் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் வாழை இலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

18 views

மிஸ்டு கால் கொடுத்ததில் மலர்ந்த காதல் - காதலித்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம்

மிஸ்டு கால் கொடுத்து பள்ளி மாணவியை காதலித்து கடைசியில் அவரையே கடத்திச் சென்று திருமணம் செய்த கொத்தனார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

25 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

21 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.