காட்டிற்குள் கறி விருந்து...கமுதி அருகே விநோத திருவிழா...!
பதிவு : அக்டோபர் 04, 2020, 12:24 PM
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, ஆண்கள் மட்டும் வழிபடும் அம்மன்கோவில் திருவிழாவில், 50 ஆடுகள் பலியிட்டு, காட்டுக்குள் கறி விருந்து பரிமாறப்பட்டது.
முதல்நாடு கிராம கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். இங்கு ஆண்டுக்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில், நேற்று இரவு ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 பலியிட்டு, படையலிடப்பட்டது. பின்னர் பூஜை செய்யப்பட்டு, பனை ஓலையால் செய்த மட்டையில், சாப்பாடு பறிமாறப்பட்டது.  காட்டிற்குள் பறிமாறப்பட்ட கறிவிருந்தை ஆண்கள் மட்டும் சாப்பிட்டனர். மீதமிருந்த சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் அனைத்தும் அங்கேயே புதைக்கப்பட்டது. இந்த திருவிழாவில்,  முதல்நாடு கிராமத்தை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஆண்களும் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.   

தொடர்புடைய செய்திகள்

9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

17 views

பிற செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு பரப்பிய நபர், மன்னிப்பு கோரிய வீடியோவின் உண்மை தன்மையயை ஆய்வு செய்து, ப்ளூ கார்னர் நோட்டீஸுடன் இலங்கை போலீசுக்கு அனுப்ப, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்

444 views

உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் - ஸ்டாலின்

அகில இந்திய அளவில், மருத்துவக் கல்விக்கான இடங்களில், 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

31 views

"14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு" - "நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு"

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

282 views

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள்

திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடியபடியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் காவிரி டெல்டாவில் கடைமடை பகுதி.

70 views

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

8 views

ராஜராஜசோழனின் 1035ஆவது சதய விழா -இரவு 9 மணி அளவில் பெரிய கோயில் வளாகத்தில் வீதிஉலா

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் ஆயிரத்து முப்பத்தைந்தாவது ஆண்டு சதய விழா இன்று காலை தொடங்கியது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.