சென்னை அணியில் வீர‌ர்களே இல்லையா? - வாய்ப்புக்காக ஏங்கும் சிஎஸ்கே வீர‌ர்கள்
பதிவு : அக்டோபர் 04, 2020, 12:14 PM
என்னதான் ஆனது சென்னை அணிக்கு ... வேறு வீர‌ர்களே இல்லையா என்ற கேள்வி சென்னை அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்துள்ளது. அதற்கு விடைகாணும் முயற்சியாக இதுவரை வாய்ப்பே கிடைக்காத சென்னை வீர‌ர்களை பற்றி பார்ப்போம்..
ஐ.பி.எல். 2020யின் முதல் போட்டியிலேயே, எதிரியாக பார்க்கப்படும் மும்பையுடன் வெற்றி பெற்றதால் குதூகலத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், ராஜஸ்தான், டெல்லி, ஐதரபாத் என சென்னை அணிக்கு தொடர் தோல்விகள்.

ஒவ்வொரு முறை தோற்கும் போதும் அடுத்த போட்டியில் பார்க்கலாம்  என சமாதானமாகி நகர்ந்து வந்த நிலையில், இப்போது அச்சம் எழுகிறது... ப்ளே ஆப் சுற்றில் சென்னை அணியை பார்க்க முடியுமா முடியாதா என்று... 

என்னதான் ஆனது சென்னை அணிக்கு... சொதப்பும் வீர‌ர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுவது எதனால்...  வீர‌ர்களே இல்லையா...? அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லையா...? இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடிப் பார்ப்போம்... 

தொடக்க ஆட்டக்கார‌ர்களில் வாட்சன் தொடர்ந்து தடுமாறி வருகிறார்... ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பின் பேசிய அவர், தோல்விக்கு தானும் பொறுப்பை என்பதை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார். சென்னை அணியில் அவருக்கு மாற்று இருக்கிறதா என்றால், கட்டாயம் இருக்கின்றனர்...  

சென்னை அணியில் இதுவரை வாய்ப்பே கிடைக்காத வீர‌ர்கள் என்று பார்க்கும் போது, தமிழக வீர‌ர் ஜெகதீசன் முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணியை கேப்டனாக  வழி நடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து வந்தவர். 10 போட்டிகளில் 448 ரன்கள் குவித்த இவர்,  கடந்த ஆண்டின் அதிக ரன்கள் விளாசிய வீர‌ர் என்ற பெருமையை பெற்றார்.  ஓபனிங் பேட்ஸ்மேனான இவரை, வாட்சனுக்கு மாற்றாக களமிறக்க முடியும்.  வாட்சனுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு ஆட்டக்கார‌ராக இம்ரான் தாஹீரை களமிறக்க முடியும். 
மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் வீர‌ர் கெய்க்வாட்க்கு 2 வாய்ப்புகள் அளித்த‌தை போல, தமிழக வீர‌ர் ஜெகதீசனுக்கும் வாய்ப்பு அளித்து பார்க்கலாம். 
அப்படி இல்லாத பட்சத்தில், ரோகித், டுவைன் ஸ்மித், என பலரையும் ஓபனிங் பேட்ஸ்மேனாக மாற்றியுள்ள தோனி, சாம் கரனை ஓபனிங் அனுப்பி பார்க்கலாம்... 

இதே போல தமிழகத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கிறார்.  கேதர் ஜாதவுக்கு இவர் சிறந்த மாற்றாக இருப்பார். 

இவ்வாறு வாய்ப்பு அளித்தால், டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து சிறந்த வீர‌ர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வினும், ஐதராபாத் அணியில் நடராஜனும் என தமிழகத்தை சேர்ந்த வீர‌ர்கள் கலக்கி கொண்டிப்பதே இதற்கு உதாரணம்

தொடர்புடைய செய்திகள்

சென்னை அணியில் விளையாட போகும் 11 வீரர்கள் யார், யார் ?

நடப்பு ஐபிஎல் தொடரில் , சி.எஸ்.கே அணியில் இடம்பெற உள்ள 11 வீரர்கள் யார்..?

106422 views

ஐ.பி.எல் தொடர் - சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

759 views

புரோமோ சூட்டில் ஜடேஜா அசத்தல் நடனம்

ஐபிஎல் போட்டி தொடரை முன்னிட்டு , நடைபெற்ற புரோமோ சூட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சாவ்லா , ஜடேஜா , கேதார் ஜாதவ் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

504 views

இன்று சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதல் - எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.?

246 views

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

36 views

பிற செய்திகள்

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

2559 views

"கொரோனா பரப்பும் செயலில் அதிபர் டிரம்ப்" - டிரம்ப் பேரணி குறித்து ஜோ பிடன் கடும் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தும் பேரணி மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக ஜோ பிடன் குற்றம் சாட்டியுள்ளார்.

9 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - டிமிடிரோவ் கால் இறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமிட்ரோவ், பிரபல கிரேக்க வீரர் ஸ்டேபானஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

14 views

கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி - இறுதி பந்தில் திரில் வெற்றி

ஐ.பி.எல் 49 வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.

54 views

மனைவியுடன் சைகை மொழி பேச்சு - கோலி மகிழ்ச்சி

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சைகை மொழியில் பேசும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

1707 views

வியன்னா ஓபன் டென்னிஸ் - ஜோகோவிக் அசத்தல் வெற்றி

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிக் குரேஷியாவின் போர்னா கோரிக்கை எதிர்கொண்டார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.