ஜி.எஸ்.டி. கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
பதிவு : அக்டோபர் 04, 2020, 12:06 PM
அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 'மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்' வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பேரிடரில் தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கூட, மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகையை, உரிமையுடன் கேட்டுப் பெறுவதில் முதலமைச்சர் தோல்வியடைந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இனியும் அமைதி காக்காமல், அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் 42-ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், "மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்" வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.