வேளாண் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் - பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : அக்டோபர் 03, 2020, 04:54 PM
வேளாண் துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம் ரோதங்கில், உலகின் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். சோலங்கி பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொதுமக்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை குறைப்பதற்காகவும், அதிக அளவிலான சேவைகளை பெறுவதற்காகவும் அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார். அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பணியாற்றி வந்தவர்களுக்கு நாங்கள் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்கள் தொல்லைகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் சாடினார். மாற்றத்தை கொண்டுவர நாடு உறுதிபூண்டு உள்ளதாகவும் அதற்காகவே வேளாண்துறையில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் முன்னாள் தேர்தல் இருப்பதாகவும், ஆனால், விவசாயிகளுடைய பிரகாசமான எதிர்காலம் தான் தங்களுக்கு முன்னால் நிற்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

400 views

கொரோனா தடுப்பு மருந்து விலங்குகள் மீதான பரிசோதனையை துவக்கிய குழு

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாராகி வரும் கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகள் மீது செலுத்தி பரிசோதனையை மருத்துவக் குழு துவங்கியுள்ளது.

181 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

56 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

18 views

பிற செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் பா.ஜ.க.வில் சேர்கிறார்

நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்

164 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - ராகுல்காந்தி விளக்கம்

உத்தரபிரதேச சம்பவத்தை போன்று பஞ்சாப் அல்லது ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என்று அம்மாநில அரசுகள் மறுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

131 views

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள் - ஆந்திர முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு கடிதம்

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு, பாராட்டு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

243 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.