"25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது"
பதிவு : அக்டோபர் 03, 2020, 12:16 PM
இந்தியாவில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

பெண்கள் ஓட்டுநர்களாக பங்கேற்ற கார் பேரணி - காஷ்மீரில் முதல்  முறையாக நிகழ்ச்சி

காஷ்மீரில் முதல் முறையாக பெண்கள்  ஓட்டுநர்களாக பங்கேற்ற கார் பேரணி நடைபெற்றது. பெண் ஓட்டுநர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், பெண்களின் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து, தனியார் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பேரணியானது ஸ்ரீநகர் போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டிய சாலை வழியாக பயணித்த கார்களை காண ஏராளமானோர் திரண்டனர்.

சிசிடிவியில் பதிவான சிறுத்தை நடமாட்டம் - குடியிருப்புவாசிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாடுவது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வனத்துறை மேற்கொண்ட ஆய்வில், சிறுத்தையின் கால் தடம் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கைசர் பஹாரி கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.